Archives: மே 2021

மீண்டும் செழிக்க

போதுமான சூரிய ஒளி மற்றும் தண்ணீர் இருந்தால், கலிபோர்னியாவின் காட்டுப்பூக்கள் விளையும் பகுதிகளான ஆன்டெலோப் பள்ளத்தாக்கு மற்றும் ஃபிகியூரோவா மலை போன்றவை செழிப்பாக இருக்கும். ஆனால் வறட்சி ஏற்பட்டால் என்ன ஆகும்? விஞ்ஞானிகள் சில காட்டுப்பூக்கள் மண்ணின் வழியாக முளைத்து பூக்க அனுமதிக்காமல், அவற்றின் விதைகளை பெருமளவில் நிலத்தடியில் சேமித்து வைத்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். வறட்சிக்குப் பிறகு, தாவரங்கள் தாங்கள் சேமித்த விதைகளைப் பயன்படுத்தி மீண்டும் செழிக்கத் தொடங்குகின்றன.

பண்டைய இஸ்ரவேலர் கடுமையான நிலைமைகளை மீறி எகிப்து தேசத்தில் செழித்து வளர்ந்தனர். அடிமைகளாயிருந்த இவர்களை வயல்களில் வேலை செய்யவும் செங்கற்களை தயாரிக்கவும் எகிப்தியர்கள் கட்டாயப்படுத்தினர். இரக்கமற்ற இந்த எகிப்திய கண்காணிகள், பார்வோனுக்கு முழு நகரத்தையும் கட்டுவதற்கு அவர்களை கட்டாயப்படுத்தினர். எகிப்தின் மன்னர் சிசுக்கொலையை நடைமுறைப்படுத்தினான். ஆயினும், தேவன் அவர்களை பாதுகாத்ததால், “அவர்களை எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாய் அவர்கள் பலுகிப் பெருகினார்கள்” (யாத்திராகமம் 1:12). பல வேத அறிஞர்கள் இஸ்ரவேலின் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் மக்கள் தொகை எகிப்தில் இருந்த காலத்தில் இரண்டு மில்லியனாக (அல்லது அதற்கு மேற்பட்டதாக) இருந்தது என்று மதிப்பிடுகின்றனர்.

அப்போது தம் மக்களைப் பாதுகாத்த தேவன், இன்றும் நம்மை ஆதரிக்கிறார். எந்த சூழலிலும் அவர் நமக்கு உதவ முடியும். இன்னொரு கடினமான சூழ்நிலையை சகித்துக்கொள்வது பற்றி நாம் ஒருவேளை கவலைப்படலாம். ஆனால், “இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டு புல்லுக்கு” தேவன் கரிசனையுடன் இருந்தால் நம் தேவைகளை அவர் கண்டிப்பாக பூர்த்தி செய்ய முடியும் என்று வேதம் நமக்கு உறுதியளிக்கிறது (மத்தேயு 6:30). 

துணிச்சலான அன்பு

நான்கு சிற்றாலய போதகர்கள் கதாநாயகர்களாய் அறியப்படவில்லை. ஆனால் இரண்டாம் உலகப் போரின்போது, 1943 ஆம் ஆண்டு பிப்ரவரி இரவு, எஸ்.எஸ். டோர்செஸ்டர் என்னும் அவர்களின் போக்குவரத்துக் கப்பல், கிரீன்லாந்து கடற்கரையில் தாக்கப்பட்டது. இந்த நான்கு பேரும் பீதியடைந்த நூற்றுக்கணக்கான வீரர்களை அமைதிப்படுத்த முயற்சி செய்தனர். கப்பல் மூழ்கிக்கொண்டிருக்க, காயமடைந்த நபர்கள் நெரிசலான உயிர் காக்கும் படகுகளில் குதித்தனர். இந்த நான்கு போதகர்களும் அமைதியாய் “தைரியத்தைப் பிரசங்கித்து" குழப்பத்தை அமைதிப்படுத்தினர் என்று உயிர் பிழைத்த ஒருவர் கூறுகிறார்.

உயிர்காக்கும் லைஃப் ஜாக்கெட்டுகள் தீர்ந்துபோனபோது, இவர்கள் நால்வரும் தங்களுடையதை கழற்றி, பயந்துபோன ஒரு இளைஞனுக்குக் கொடுத்தனர். மற்றவர்கள் வாழும்படி அவர்கள் கப்பலுடன் மூழ்க தீர்மானித்தார்கள். அதில் தப்பிப்பிழைத்த ஒருவர், “இது நான் பார்த்த மிகச் சிறந்த விஷயம், அல்லது பரலோகத்தின் இந்தப் பக்கத்தைப் பார்க்க வாஞ்சிக்கிறேன்” என்று கூறுகிறார். 

கப்பல் மூழ்கத் தொடங்கியவுடன் தங்கள் கரங்களைக் கோர்த்து, இந்த நான்கு போதகர்களும்  ஒன்றாக ஜெபித்து, அவர்களுடன் அழிந்துபோகிறவர்களுக்கு ஊக்கத்தை அளித்தனர்.

துணிச்சல் அவர்களின் வீரமிகு சாதனையைக் குறிக்கிறது. இருப்பினும், அன்பானது நான்குபேர் வழங்கிய இந்த பரிசை வரையறுக்கிறது. கொரிந்துவில் புயலால் தாக்கப்பட்ட தேவாலயத்தில் உள்ளவர்கள் உட்பட அனைத்து விசுவாசிகளிடமும் இதுபோன்ற அன்பை பவுல் வலியுறுத்தினார். மோதல், ஊழல் மற்றும் பாவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பவுல் “விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள்” என்று வலியுறுத்தினார் (1கொரிந்தியர 16:13). பின்னர் அவர், “உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது.” (வச.14) என்றும் வலியுறுத்தினார்.

இயேசுவில் உள்ள ஒவ்வொரு விசுவாசிக்கும், குறிப்பாக ஒரு நெருக்கடியின் போது இது ஒரு உத்தமமானக் கட்டளை. கிறிஸ்துவைப் பிரதிபலிப்பதும் மற்றவர்களுக்கு அவருடைய அன்பைக் கொடுப்பதுமே வாழ்க்கையில் பிரச்சனைகள் அச்சுறுத்தும் போது நம்முடைய துணிச்சலான பதிலாய் இருக்கட்டும்.

நடுநிலைக்கு மாற்றவும்

காரை கழுவுகிற தானியங்கி எந்திரத்தில் எனக்கு முன்னால் ஒருவர் இருந்தார். அவர் வேண்டுமென்றே தனது இடத்தின் பின்புறத்தில் நுழைந்து, அந்த இடத்தை அகற்றினார், எனவே அது அதிக சக்தி கொண்ட தூசு துடைக்கும் தூரிகைகளைப் பறிக்காது. அவர் உதவியாளருக்கு பணம் கொடுத்தார், பின்னர் தானியங்கி பாதையில் இழுத்துச் சென்றார் - அங்கு அவர் தனது டிரக்கை ஓட்டினார். உதவியாளர் அவரைப் பின்தொடர்ந்து, வாகனம் பின்னாக வருகிறது என்று கூச்சலிட்டு எச்சரித்தார். ஆனால் அந்த டிரக்கின் ஜன்னல்கள் மூடி இருந்தன, அவரால் கேட்க முடியவில்லை. அவர் கார் கழுவும் வழியாக நான்கே வினாடிகளில் கடந்தார். அவரது டிரக் கொஞ்சம் கூட ஈரமாகவில்லை.

எலியாவும் ஒரு பணியில் இருந்தார். அவர் பெரிய வழிகளில் தேவனை சேவிப்பதில் மும்முரமாக இருந்தார். அவர் ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் பாகால் தீர்க்கதரிசிகளை தோற்கடித்தார். அது அவரை சோர்வடையச் செய்தது (1 இராஜாக்கள் 18:16-39ஐ காண்க). அவருக்கு நடுநிலையாக நேரம் தேவைப்பட்டது. தேவன் மோசேக்கு ஏற்கனவே வெளிப்பட்ட ஓரேப் கன்மலைக்கு எலியாவைக் கூட்டி வந்தார். மீண்டும் தேவன் மலையை அசையப்பண்ணினார். ஆனால் புயல் காற்று, பூகம்பம், அக்கினி அகிய எதிலும் தேவன் தென்படவில்லை. அதற்கு பின்பாக அமர்ந்த மெல்லிய சத்தத்தில் தேவன் உலியாவிடம் இடைபடுகிறார். அதை எலியா கேட்டபோது, தன் சால்வையினால் தன் முகத்தை மூடிக்கொண்டு தேவனைச் சந்திக்க எலியா வெளியே வந்தார் (1 இராஜாக்கள் 19:13).

நீங்களும் நானும் ஒரு பணியில் இருக்கிறோம். நமது இரட்சகருக்காக பெரிய காரியங்களைச் செய்ய நம் வாழ்க்கையை இயக்குகிறோம். ஆனால் நாம் ஒருபோதும் நடுநிலைக்கு மாறாவிட்டால், நாம் வாழ்க்கையில் அதிவேகமாய் கடந்து அவருடைய ஆவியின் வெளிப்பாட்டை இழக்க நேரிடும். தேவன் மெல்லிய சத்தத்தில் பேசுகிறார், “நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவன் என்று அறிந்துகொள்ளுங்கள்” (சங்கீதம் 46:10). 

திட்டங்கள் உள்ளதா?

பதினெட்டு வயது நிரம்பி காடன், கல்வி உதவித்தொகையில் தனக்கு ஒரு கல்லூரியில் சேர்க்கை கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தான். உயர்நிலைப் பள்ளியில் ஒரு வளாக ஊழியத்தில் ஈடுபட்டிருந்த அவன், புதிய சூழலில் இதேபோன்ற ஊழியத்தில் பங்கேற்க எதிர்பார்த்தான். அவன் தனது பகுதிநேர வேலையிலிருந்து பணத்தை மிச்சப்படுத்தினான். மேலும் ஒரு புதிய வேலையில் சிறந்த முன்னிலைப் பெற்றான். அவன் சில குறிக்கோள்களை மனதில் வைத்திருந்தான், எல்லாமே அட்டவணைபடி சரியாக நடந்து கொண்டிருந்தது.

பின்னர் 2020 வசந்த காலத்தில் எற்பட்ட ஒரு உலகளாவிய சுகாதார நெருக்கடி எல்லாவற்றையும் மாற்றியது.

தனது முதல் செமஸ்டர் ஆன்லைனில் இருக்கக்கூடும் என்பதை பள்ளி நிர்வாகம் கேடனுக்கு தெரியப்படுத்தியது. அவனுடைய கல்லூரி வளாக ஊழியம் நிறுத்தப்பட்டது. அவனுடைய வேலை வாய்ப்பும் வறண்டுவிட்டது. அவன் விரக்தியடைந்தபோது, அவனது நண்பர், “ஆமாம், அவர்கள் வாயில் குத்து விழும் வரை அனைவருக்கும் ஒரு திட்டம் உள்ளது” என்ற ஒரு பிரபலமான குத்துச்சண்டை வீரரின் வார்த்தைகளை அவனுக்கு நினைவுபடுத்தினான்.

நீதிமொழிகள் 16, நாம் நம் செய்கைகளை கர்த்தருக்கு ஒப்புவிக்கும்போது, அவர் நம்முடைய திட்டங்களை உறுதிப்படுத்துவார், அவருடைய சித்தத்தின்படி காரியங்களைச் செய்வார் (வச. 3-4) என்று கூறுகிறது. இருப்பினும் உண்மையான அர்ப்பணிப்பு சற்று கடினமாக இருக்கும். இது நம்முடைய காரியத்தை நாம் சுயாதீனமாய் நம்முடைய போக்கில் செய்யாமல், தேவனின் வழிநடத்துதலுக்கான திறந்த இதயத்தை வரவேற்கிறது (வச. 9, 19:21).

நிறைவேறாத கனவுகள் ஏமாற்றத்தைத் தரக்கூடும். ஆனால் நம் எதிர்காலத்தைக் குறித்த நம்முடைய குறுகிய பார்வை, எல்லாம் அறிந்த தேவனுடைய திட்டத்தை எப்போதுமே ஈடுகட்ட முடியாது. நாம் அவருக்குக் கீழ்ப்படியும்போது, முன்னோக்கி செல்லும் பாதையை நாம் காணாதபோதும் அவர் நம் நடைகளை இன்னும் அன்பாக வழிநடத்துகிறார் என்பதில் உறுதியாக இருக்க முடியும் (16:9).

காணாத பார்வை

யூரி ககரின் விண்வெளியில் பயணித்த முதல் மனிதரான பிறகு, அவர் ரஷ்ய கிராமப்புறங்களில் பாராசூட் பயணம் செய்தார். பண்ணையில் வேலை செய்த ஒரு பெண் ஆரஞ்சு உடையணிந்த இந்த விண்வெளி வீரரைக் கண்டார். அப்போது அவர் ஹெல்மெட் அணிந்து இரண்டு பாராசூட்டுகளை இழுத்துச் சென்றுக்கொண்டிருந்தார். “நீங்கள் விண்வெளியில் இருந்து வந்திருக்கிறீர்களா?” அவள் ஆச்சரியத்துடன் கேட்டாள். “உண்மையில், நான் அப்படிதான் வந்தேன்,” என்று அவர் கூறினார்.

சோவியத் தலைவர்கள் இந்த வரலாற்று நிகழ்வை மார்க்க எதிர்ப்பு பிரச்சாரமாக மாற்றினர். “ககரின் விண்வெளிக்குச் சென்றார், ஆனால் அவர் அங்கு எந்த தேவனையும் காணவில்லை” என்று அவர்களின் பிரதமர் அறிவித்தார். (ககரின் அப்படி ஒருபோதும் சொல்லவில்லை.) சி.எஸ். லூயிஸ், “பூமியில் தேவனைக் காணாதவர்கள், அவரை விண்வெளியில் காண வாய்ப்பில்லை” என்கிறார். 

இந்த வாழ்க்கையில் தேவனைப் புறக்கணிப்பது பற்றி இயேசு எச்சரித்திருக்கிறார். அவர் இறந்த இரண்டு மனிதர்களின் உவமையை சொன்னார். தேவனுக்கு நேரம் கொடுக்கமுடியாமல் இருந்த ஒரு ஐசுவரியமுள்ள மனுஷன், விசுவாசத்தில் ஐசுவரியவானும் தரித்திரனுமான லாசரு (லூக்கா 16: 19-31). பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, ஐசுவரியவான் பூமியில் இருக்கும் தன் சகோதரர்களுக்காக ஆபிரகாமிடம் மன்றாடினான். “லாசருவை அனுப்புங்கள்” என்று ஆபிரகாமிடம் கெஞ்சினான். “மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான்” (வச.27,30). ஆபிரகாம் பிரச்சனையின் உண்மைத் தன்மையை அறிந்து: “அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும் நம்பமாட்டார்கள்” (வச. 31).

ஓஸ்வால்ட் சேம்பர்ஸ் எழுதினார்: “பார்ப்பது என்றால் நம்புவது என்று அர்த்தமல்ல. நாம் எதை நம்புகிறோம் என்பதின் அடிப்படையில் தான் ஒன்றைப் பார்க்கிறோம்.”